Thursday, June 17, 2021

மைசூர்போண்டா ரெசிபி


தேவையான பொருட்கள்


மைதா- 2 கப்

அரிசிமாவு- 1/4 கப்

சீரகம்- 1 தேக்கரண்டி

தயிர்- 1/2 கப்

சமையல்சோடா- 1/4 தேக்கரண்டி

வெங்காயம்- 1 நறுக்கியது 

பச்சைமிளகாய்- 2

இஞ்சி- 1 துண்டுநறுக்கியது

கறிவேப்பிலை 

கொத்தமல்லிஇலை

தண்ணீர்

உப்பு

எண்ணெய்


செய்முறை 


1. முதலில் ஒரு கிண்ணத்தில் மைதா மாவுஅரிசி மாவுதேவை
யான அளவு உப்புசமையல் சோடாசீரகம்தயிர் மற்றும்   தண்ணீர் சேர்த்து மாவாக கரைத்துக்கொள்ளவும்.

 2. இந்த மாவில் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம்பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய்பொடியாக நறுக்கிய இஞ்சிகறிவேப்பிலைகொத்தமல்லி இலை சேர்த்து நன்கு   கலக்கிவைத்துக் கொள்ளவும்.

3.அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடேற்றிய பின்புமாவை சிறு சிறு உருண்டைகளாக எண்ணெயில் போட்டு  பொன்னிறமாகும் வரை பொரிக்கவும்

4. சூடான மற்றும் சுவையான மைசூர் போண்டா தயார்.

No comments:

Post a Comment