Showing posts with label Veg - Receipe. Show all posts
Showing posts with label Veg - Receipe. Show all posts

Thursday, July 8, 2021

கோதுமை அல்வா | Wheat Halwa Recipe


 தேவையானபொருட்கள்

 

சம்பா கோதுமை- 1 கப் 


தண்ணீர் 


நெய்- 1/2 கப் 


ஏலக்காய்தூள்- 1 தேக்கரண்டி 


சர்க்கரை- 1 கப்


முந்திரி பருப்பு வறுத்தது



செய்முறை 


1. கோதுமையை எட்டு மணி நேரம் ஊற வைக்கவும்


2. ஊறிய கோதுமையை மிக்ஸியில் போட்டு அரைத்துவடிகட்டி பால் எடுக்கவும்.


3. கடாயில் நெய் மற்றும் கோதுமை பால் ஊற்றிய பின்அடுப்பைபற்ற வைக்கவும்


4. பால் கெட்டியாகும் வரை கைவிடாமல் கிண்டவும்.


5. இதில் ஏலக்காய்தூள் மற்றும் பாதி அளவு சர்க்கரை சேர்க்கவும்


6. மற்றோரு பாத்திரத்தில்மீதம் உள்ள சர்க்கரையை போட்டு சூடாக்கவும்


7. சர்க்கரை உருகிநிறம் மாறியபின்கடாயில் ஊற்றிஅல்வாவுடன் சேர்த்து    கிண்டவும்


8. அடுத்து இதில் நெய் ஊற்றி கிளறவும்


9. அல்வா கடாயின் ஓரத்தில்  ஒட்டாமல் வந்தவுடன் எடுக்கவும்


10. அல்வா பரிமாறும் பாத்திரத்தில் நெய் தடவிஅல்வாவை போட்டுவறுத்த முந்திரி   பருப்பு வைத்து சாப்பிடவும்.


Monday, July 5, 2021

மோர் குழம்பு | Mor Kuzhambu Recipe


மசாலா விழுது அரைக்க


தேங்காய்- 1/2 கப்துருவியது


பூண்டு- 5 பற்கள்நறுக்கியது


சீரகம்- 1 தேக்கரண்டி


காய்ந்தமிளகாய்- 3


பச்சைமிளகாய்- 2


மஞ்சள்தூள்- 1/4 தேக்கரண்டி


தண்ணீர்


தேவையான பொருட்கள்


தயிர்- 1/2 லிட்டர்


தண்ணீர்


உப்பு


தாளிப்பு செய்ய


தேங்காய்எண்ணெய்


கடுகு- 1/2 தேக்கரண்டி


சீரகம்- 1/2 தேக்கரண்டி


பெருங்காயத்தூள்


காய்ந்தமிளகாய்- 1


கறிவேப்பிலை


இஞ்சி- 1 துண்டு பொடியாக நறுக்கியது 


பெரிய வெங்காயம்- 1 நறுக்கியது


தயிர் கலவை


செய்முறை:



1. மிக்ஸியில் துருவிய தேங்காய்பூண்டுசீரகம்காய்ந்த மிளகாய் மற்றும் பச்சை   மிளகாய் மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து தண்ணீர் இன்றி அரைக்கவும்பின்பு சிறிது    சிறிதாக தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.


2. ஒரு கிண்ணத்தில் தயிர்அரைத்த மசாலா விழுது மற்றும் தண்ணீர்உப்பு சேர்த்து   நன்கு கலக்கவும்தயிர் புதியதாகவோ அல்லது இனிப்பாகவோ இருக்கக்கூடாது.    புளிப்பாக இருக்க வேண்டும்.


3. ஒரு கடாயை சூடாக்கவும்தேங்காய் எண்ணெய்கடுகுசீரகம்பெருங்காயத்தூள்காய்ந்த மிளகாய்கறிவேப்பிலைஇஞ்சிவெங்காயம் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.


4. அடுப்பை அணைத்துவிட்டுகடாயில் தயிர் கலவையை சேர்க்கவும்.


5. மோர் குழம்பை சூடான சாதத்துடன்ஊறுகாய் மற்றும் அப்பளத்துடன் பரிமாறவும்.


Thursday, July 1, 2021

மசாலா மேக்ரோனி | Masala Macroni Recipe


 தேவையானபொருட்கள்


மேக்ரோனி  - 1 1/2 கப் 


இஞ்சி- 1 தேக்கரண்டி நறுக்கியது 


பூண்டு- 1 தேக்கரண்டி நறுக்கியது 


பச்சைமிளகாய்- 2 நறுக்கியது 


பெரியவெங்காயம்- 1 நறுக்கியது 


தக்காளி- 2 நறுக்கியது 


கேரட்- 1 நறுக்கியது 


பீன்ஸ் நறுக்கியது 


குடைமிளகாய்- 1/2 நறுக்கியது 


இட்டாலியன்சீசனிங்- 1 தேக்கரண்டி 


சில்லிஃப்ளேக்ஸ்- 1 தேக்கரண்டி 


ரெட் சில்லி சாஸ்- 2 மேசைக்கரண்டி 


தக்காளி கெட்சப்- 1/4 கப் 


மொஸெரெல்லா சீஸ் துருவியது 


எண்ணெய் 


உப்பு 


தண்ணீர் 


கொத்தமல்லி இலை


செய்முறை 



1. ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க   விடவும்.


2. தண்ணீர் கொதித்த பின் இதில் சிறிதளவு உப்பு சேர்த்து மேக்ரோனியை வேக வைத்து எடுக்கவும்.


3. வேக வைத்த பாஸ்தாவை வடிகட்டி எண்ணெய் ஊற்றி குளிக்க   வைத்துக் கொள்ளவும்.


4. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிஅதில் வெங்காயம்இஞ்சிபூண்டுமற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்வெங்காயம் வதங்கியதும் அதில் தக்காளி மற்றும் உப்பு  சேர்த்து நன்கு வதக்கவும்.


5. தக்காளி வதங்கிய பின் குடைமிளகாய்கேரட் மற்றும் பீன்ஸ் சேர்த்து கிளறவும்.


6. தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கடாயை வைத்து 10 நிமிடங்களுக்கு காய்கறிகளை வேக வைக்கும்.


7. காய்கறிகள் வெந்த பின் சில்லிஃப்ளேக்ஸ்இட்டாலியன் சீசனிங்,   ரெட்சில்லி சாஸ்கெட்சப் மற்றும் மொஸெரெல்லாசீஸ் சேர்த்து கிளறவும்.


8. அடுத்து வேக வைத்த பாஸ்தாவை போட்டு நன்கு கலக்கவும்.


9. இறுதியாககொத்தமல்லிஇலைதூவிஇறக்கவும்.


10. மசாலாமக்ரோனிதயார்.

Wednesday, June 30, 2021

Paneer Pepper Masala Recipe


 தேவையானபொருட்கள்


பன்னீர்- 200 கிராம் நறுக்கியது


மிளகுதூள்- 2 தேக்கரண்டி


கரம் மசாலா தூள்- 1 தேக்கரண்டி


வெங்காயம்- 2 நீளவாக்கில் நறுக்கியது


பச்சை மிளகாய்- 2 கீறியது


குடை மிளகாய்- 1/2 நீளவாக்கில் நறுக்கியது


இஞ்சி பூண்டு விழுது- 1 தேக்கரண்டி


தக்காளி- 1 பொடியாக நறுக்கியது


எண்ணெய்


உப்பு


செய்முறை


1.ஒரு பேனில்சிறிது எண்ணெய் சேர்த்துஅதில் கரம் மசாலா


   சேர்க்கவும்.


2.வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.


3.உப்புகுடைமிளகாய் சேர்த்து நன்கு கிளறவும்.


4.இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.


5.தக்காளி சேர்த்து வதக்கவும்.


6.மிளகு தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.


7.நறுக்கிய பன்னீர் துண்டுகளை சேர்த்து நன்கு கலக்கவும்.


8.பன்னீர் மிளகு மசாலா தயார் சூடாக பரிமாறவும்.