Tuesday, November 9, 2021

கட்பட் ஐஸ் கிரீம் | Gadbad Ice Cream


 தேவையானபொருட்கள்



வெண்ணிலா ஐஸ்கிரீம்

ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம்

பட்டர்ஸ்காட்ச் ஐஸ்கிரீம்

ஆப்பிள் நறுக்கியது

வாழைப்பழம் நறுக்கியது

பச்சை திராட்சை நறுக்கியது

முந்திரி பருப்பு நறுக்கியது

உலர்ந்த திராட்சை

வேகவைத்த சேமியா

ஸ்ட்ராபெர்ரி ஜெல்லி

செர்ரி


           செய்முறை


1. ஆப்பிள், வாழைப்பழம், திராட்சைஆகியவற்றை  சிறிதாக நறுக்கி  எடுத்து வைக்கவும்.


2. பரிமாறும் கிளாஸ்ஸில், வெண்ணிலா ஐஸ்கிரீமைபோட்டு, நறுக்கிய பழங்களை போடவும்.


3. அடுத்து நறுக்கிய முந்திரி பருப்பு, உலர்ந்த திராட்சையைபோட்டு, ஸ்ட்ராபெர்ரி ஐஸ் கிரீமை போடவும்.


4. அடுத்து சிறிதளவு ஸ்ட்ராபெர்ரி ஜெல்லி, வேகவைத்த சேமியாவை சேர்க்கவும்.


5. இன்னொருமுறை நறுக்கிய பழங்கள், முந்திரி, திராட்சை சேர்க்கவும்.


6. இறுதியாக பட்டர்ஸ்காட்ச் ஐஸ்கிரீம் வைத்து, செர்ரியை வைக்கவும்.


7. கட்பட் ஐஸ்கிரீம் தயார். 

No comments:

Post a Comment