தேங்காய் முந்திரி கேக் | Coconut Cashew-nut Cake Recipe
தேவையான பொருட்கள் -
ரவை - 1 & 3/4 கப்
துருவிய தேங்காய் - 1/4 கப்
தேங்காய் பால் - 1 & 3/4 கப்
உப்பு - 1/4 தேக்கரண்டி
பேக்கிங் பவுடர் - 3 தேக்கரண்டி
ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி
வெண்ணெய் - 1/2 கப்
சர்க்கரை - 2 கப்
முந்திரி பருப்பு
செய்முறை
1. தேங்காய் முந்திரி கேக் செய்ய ஒரு கிண்ணத்தில் ரவை, தேங்காய் துருவல், தேங்காய் பால் சேர்த்து நன்கு கலக்கவும்
2. இதில் சிறிதளவு உப்பு, பேக்கிங் பவுடர், ஏலக்காய் தூள், கரைத்த வெண்ணெய் மற்றும் நாட்டுச்சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும்
3. அடுத்து ஒரு கேக் டின்னை சுற்றி வெண்ணையை தடவி ஒரு பட்டர் பேப்பரை வைத்து இந்த கேக் கலவையை ஊற்றி வறுத்த தேங்காய் துருவல் மற்றும் வறுத்த முந்திரி பருப்புகளை இதன் மேல் தூவி மைக்ரோ வேவ் அவனுள் வைத்து ஒரு மணி நேரம் சூடு செய்யவும்
4. தேங்காய் முந்திரி கேக் தயார்
No comments:
Post a Comment