Wednesday, June 23, 2021

சன்னா மசாலா ரெசிபி


 தேவையானபொருட்கள்:


கொண்டைக்கடலைகால்கிலோ

வெங்காயம்இரண்டு

தக்காளிஇரண்டு

இஞ்சிவிழுதுஒருதேக்கரண்டி

பூண்டுவிழுதுஅரைதேக்கரண்டி

காய்ந்தமிளகாய்இரண்டு

சீரகம்ஒருதேக்கரண்டி

பட்டைஒருதுண்டு

கிராம்புஇரண்டு

ஏலக்காய்இரண்டு

மிளகாய்த்தூள்ஒன்றரைதேக்கரண்டி

தனியாத்தூள்ஒருதேக்கரண்டி

மஞ்சத்தூள்அரைத்தேக்கரண்டி

கொத்தமல்லிஒருபிடி

வெண்ணெய்இரண்டுமேசைக்கரண்டி

எண்ணெய்இரண்டுமேசைக்கரண்டி

உப்புத்தூள்இரண்டுதேக்கரண்டி




செய்முறை:



கொண்டைக்கடலையை இரவு முழுவதும் ஊற வைக்கவும்வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கிவைக்கவும்காய்ந்தமிளகாய்சீரகத்தை ஒன்றும் பாதியுமாகபொடித்து கொள்ளவும்.


கொண்டைக்கடலை ஊறவைத்த தண்ணீருடன் ஒரு தேக்கரண்டி ஊப்புத்தூளை சேர்த்து வேகவைத்துக்கொள்ளவும்வேகவைத்த கடலையில் கால் கோப்பை தனியாக எடுத்து வைத்துகரண்டியின் உதவியால் நன்கு மசித்துக்வைக்கவும்.


பிறகுவாயகன்ற சட்டியில் வெண்ணெய்எண்ணெய்,இரண்டையும் கலந்து ஊற்றி காயவைக்கவும்பிறகுவாசனைப்  பொருட்களைப் போட்டு வறுத்து வெங்காயத்தை போட்டு   நன்கு வதக்கவும்.


தொடர்ந்து இஞ்சி பூண்டு விழுதைப்போட்டு நன்கு வதக்கவும்பிறகு எல்லாத்தூள்களையும்பொடித்தசீரகத்தூளையும்   சேர்த்து  நன்கு  வதக்கவும்பின்னர்  நறுக்கினத் தக்காளியைக் கொட்டிஉப்பைச் சேர்த்துநன்குவதக்கவும்.


தக்காளி நன்கு வெந்துஎல்லாம் ஒன்றாய் சேர்ந்து மசாலாபதத்திற்கு வரும் வரை வேகவிடவும்.


பிறகு வேகவைத்தகடலையை தண்ணீரோடு சேர்த்து கொட்டிநன்கு கலக்கிவிட்டு கொதிக்கவிடவும்.


மசாலா நன்கு கொதித்து கெட்டியான பதம் வந்தவுடன் மசித்து வைத்துள்ளகடலையை போட்டு நன்குகிளறிவிடவும்.


பின்னர் கொத்தமல்லியைதூவி அதையும் நன்குகிளறிவிட்டுஇறக்கிவிடவும்இதனைசூடாகபூரிசப்பாத்தியுடன் பரிமாறவும்

No comments:

Post a Comment