சாக்லேட் பட்ஜ் கேக் ரெசிபி
தேவையானபொருட்கள்
மைதா மாவு - 1 3/4 கப்
கோகோ பவுடர் - 3/4 கப்
உப்பு- 1 தேக்கரண்டி
பேக்கிங் சோடா- 1 1/2 தேக்கரண்டி
பேக்கிங் பவுடர் - 1 1/2 தேக்கரண்டி
சர்க்கரை- 2 கப்
வெஜிடபுள் ஆயில் - 1/2 கப்
வெண்ணிலா எசென்ஸ் - 2 தேக்கரண்டி
முட்டை - 2
பால் - 1 கப்
சூடான நீர்- 1 கப்
வெண்ணெய்
சாக்லேட் ஐசிங் செய்ய
பிரெஷ் கிரீம்- 200 கிராம்
சாக்லேட்- 200 கிராம்
செய்முறை
1. ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, கோகோ பவுடர், உப்பு,
பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர், மற்றும்சர்க்கரையை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
2. பிறகு இதனுடன் வெஜிடபுள் ஆயில், வெண்ணிலா எசென்ஸ், முட்டை, பால் சேர்த்து பீட் செய்யவும்.
3. பின்பு ஒரு கப் சூடான நீரை சேர்த்து பீட் செய்யவும்.
4. கேக்டின்களை கிரீஸ் செய்து பிறகு டின்களில் மாவு தூவிவைக்கவும்.
5. டின்களில் முக்கால் பாகம் கேக்மாவை ஊற்றி 40 நிமிடங்களுக்கு180°c க்குவேகவிடவும்.
சாக்லேட் ஐசிங் செய்ய
6. ஒரு பானில் பிரெஷ் கிரீம் மற்றும் சாக்லேட் துண்டுகளை சேர்த்து குறைந்த தீயில் சாக்லேட் உருகும் வரை கிளறவும்.
7. பேக்கிங் செய்த கேக் ஆறியவுடன் கேக்கின் மேலே ஒரு தட்டை வைத்து கேக்கை திருப்பவும்.
8. கத்தியால், கேக்கை பக்கவாட்டில் இரண்டாக கட் செய்து மேல் பகுதியை தனியாக எடுத்துவைக்கவும்.
9. கேக்கின் மேல் பகுதியில் ஐசிங்கை பரப்பவும்.
10 முன்பு செய்தது போல மற்றொரு கேக்கை பக்கவாட்டில் இரண்டாக கட் செய்து மேலே வைத்து மீண்டும் ஐசிங்கை மேலே பரப்பி, கட் செய்த ஒரு கேக்கின் மேல் பகுதியை மேலேவைக்கவும்.
11. இப்போது ஐசிங்கை கேக் மீது முழுவதும் பரப்பவும்.
12. சாக்லேட் பட்ஜ் கேக் தயார்.
No comments:
Post a Comment