தேவையான பொருட்கள்
மசாலா தூள் செய்ய
சீரகம் - 3 தேக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
கிராம்பு
மிளகு - 1 தேக்கரண்டி
பட்டை - 2 துண்டு
ஆம்சூர் பவுடர் - 1 தேக்கரண்டி
கருப்பு உப்பு - 1/2 தேக்கரண்டி
புதினா கொத்தமல்லி சட்னி செய்ய
புதினா இலை - கையளவு
கொத்தமல்லி இலை - 1/2 கப்
பச்சை மிளகாய் - 3
இஞ்சி - 1 துண்டு நறுக்கியது
எலுமிச்சைபழச்சாறு - 1/2 பழத்தின் சாறு
கருப்பு உப்பு - 1/2 தேக்கரண்டி
தண்ணீர் - 1 தேக்கரண்டி
பாம்பே சான்விச் செய்ய
பிரட்
உப்பில்லாத வெண்ணெய்
புதினா கொத்தமல்லி சட்னி
வேகவைத்த உருளைக்கிழங்கு
அரைத்த மசாலா தூள்
நறுக்கிய வெங்காயம்
நறுக்கிய தக்காளி
வெள்ளரிக்காய்
மொஸரெல்லா சீஸ்
செய்முறை
1. கடாயில் சீரகம், சோம்பு, கிராம்பு, மிளகு, பட்டை சேர்த்து வறுத்து பின்பு நன்கு ஆறவிடவும்.
2. பின்பு மிக்ஸி ஜாரில் வறுத்த மசாலா, ஆம்சூர் பவுடர், கருப்பு உப்பு சேர்த்து நன்கு பொடியாக அரைத்து கொள்ளவும்.
3. பிறகு மற்றோரு மிக்ஸி ஜாரில் புதினா இலை, கொத்தமல்லி இலை, பச்சை மிளகாய், இஞ்சி, எலுமிச்சைபழச்சாறு, கருப்பு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு விழுதாக அரைக்கவும்.
4. பிரட் துண்டில் வெண்ணெய் தடவி அதன் மேல் புதினா கொத்தமல்லி சட்னியை தடவவும்.
5. பின்பு அதன் மேல் வேகவைத்து நறுக்கிய உருளைக்கிழங்கு துண்டுகளை வைக்கவும்.
6. பிறகு அரைத்த மசாலாவை அதன் மேல் தூவி பின்பு நறுக்கிய வெங்காயத்தை உருளைக்கிழங்கின் மேல் வைக்கவும்.
7. பின்பு அரைத்த மசாலாவை அதன் மேல் தூவவும். மற்றோரு பிரட் துண்டில் வெண்ணெய் தடவி அதன் மேல் புதினா கொத்தமல்லி சட்னியை தடவி பின்பு வெங்காயத்தின் மேல் வைக்கவும்.
8. பிறகு பிரட்டின் மறுபக்கம் வெண்ணெய் தடவி பின்பு கொத்தமல்லி புதினா சட்னியை தடவவும்.
9. பின்பு நறுக்கிய தக்காளி துண்டுகளை அதன் மேல் வைத்து அரைத்த மசாலாவை தூவி பிறகு நறுக்கிய வெள்ளரிக்காயை அதன் மேல் வைக்கவும்.
10. பிறகு அரைத்த மசாலாவை தூவி மற்றோரு பிரட் துண்டில் வெண்ணெய் மற்றும் புதினா கொத்தமல்லி சட்னியை தடவவும்.
11. தயார் செய்த சான்விச் மேல் சீஸை துருவி சேர்த்து பின்பு கடைசி பிரட் துண்டை வைத்து மூடவும்.
12. அடுத்து க்ரில் பேனில் வெண்ணெய் தடவி அதன் மேல் தயார் செய்த சான்விச்சை வைக்கவும்.
13. பின்பு எல்ல பக்கமும் வெண்ணெய் தடவவும். இரண்டு பக்கம் பொன்னிறமாக மாறியதும் எடுத்து பரிமாறவும்.
14. பாம்பே சான்விச் தயார்!
No comments:
Post a Comment