தேவையான பொருட்கள்
வேர்க் கடலை பருப்பு - 1 கப்
வெல்லம் - 1 கப்
நெய் - 2 மேசைக்கரண்டி
தண்ணீர்
செய்முறை
1. முதலில் வேர்க் கடலை பருப்பை வறுக்க வேண்டும். ஒரு கடாயில் வேர்க் கடலை பருப்பை மிதமான தீயில் எட்டு நிமிடத்திற்கு வறுக்க வேண்டும்
2. வேர்க்கடலை நிறம் மாறியவுடன் அடுப்பை அணைத்து விட்டு சிறிது நேரம் ஆற விட்டு அதன் தோல்களை நீக்க வேண்டும்
3. அடுத்து ஒரு கப் வெல்லத்தை சூடான நீரில் சேர்த்து உருக்க வேண்டும்
4. வெல்லம் உருகிய பிறகு அதை ஒரு கடாயில் வடி கட்டி மிதமான தீயில் பாகு பதம் வரும் வரை காய்ச்சவும்
5. ஒரு அகலமான தட்டில் சிறிது நெய்யை தடவி வைத்துக்கொள்ளவும்
6. வெல்லம் பாகு நிலைக்கு வந்தவுடன் வறுத்த வேர்க்கடலையை சேர்த்து கலக்கவும்
7. இந்த கலவையை நெய் தடவிய தட்டில் ஊற்றி பரப்பி விடவும்
8. சிறிது நேரம் ஆறவிட்டு பிறகு அதை சிறிது சிறிதாக வெட்டவும்
9. சுவையான கடலை மிட்டாய் தயார்
No comments:
Post a Comment