தேவையானபொருட்கள்
சிக்கன்'னை ஊற வைக்க
சிக்கன் லாலி பாப்- 6
சோயாசாஸ்- 1 1/2 தேக்கரண்டி
ரெட்சில்லி சாஸ்- 2 தேக்கரண்டி
தக்காளி கெட்சப்- 2 தேக்கரண்டி
எலுமிச்சை பழச்சாறு- 1/2 பழம்
இஞ்சி பூண்டு விழுது- 1 தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
மிளகு தூள்
முட்டை- 1
சோளமாவு- 1 மேசைக்கரண்டி
மைதா- 1 மேசைக்கரண்டி
சிக்கன்லாலிபாப்செய்ய
எண்ணெய்- 2 தேக்கரண்டி
பூண்டு நறுக்கியது
இஞ்சி நறுக்கியது
சிவப்பு மிளகாய் நறுக்கியது
சோயாசாஸ்- 1 தேக்கரண்டி
ரெட்சில்லி சாஸ்- 2 மேசைக்கரண்டி
தக்காளி கெட்சப்- 2 மேசைக்கரண்டி
தண்ணீர்
பொரித்த சிக்கன் லாலிபாப்
வெங்காயத்தாள் நறுக்கியது
செய்முறை
1. பாத்திரத்தில், சோயாசாஸ், சில்லிசாஸ், தக்காளிகெட்சப், எலுமிச்சைபழச்சாறு, இஞ்சி பூண்டு விழுது, உப்பு, மிளகுதூள், முட்டை,சோளமாவு, மைதா சேர்த்து நன்கு கலக்கவும்.
2. சிக்கன் துண்டுகளை சாஸ் கலவையில் போட்டு1 மணி நேரம் ஊறவைக்கவும்.
3. ஊறிய சிக்கன் துண்டுகளை, எண்ணையில் போட்டு பொன்னிறமாகும் வரை பொரிக்கவும்.
4. கடாயில், எண்ணெய் ஊற்றி, இதில் பூண்டு, இஞ்சி, சிவப்பு மிளகாய், சேர்த்து வதக்கவும்.
5. அடுத்து இதில் சோயாசாஸ், சில்லிசாஸ், தக்காளி கெட்சப் ஊற்றி கிளறவும்.
6. இதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கிண்டவும்.
7. இதில் பொரித்த சிக்கன்'னை போட்டு பிரட்டவும்.
8. கடைசியாக இதில் நறுக்கிய வெங்காயத்தாள்தூவி இறக்கவும்.