தேவையான பொருட்கள்
பிரட் டோஸ்ட் செய்ய
கடலை மாவு- 1/2 கப்
சோளமாவு- 1 மேசைக்கரண்டி
இஞ்சிபூண்டுவிழுது- 1/2 தேக்கரண்டி
சில்லிபேஸ்ட்- 2 தேக்கரண்டி
உப்பு- 1/2 தேக்கரண்டி
சாட்மசாலாதூள்- 1 தேக்கரண்டி
மாங்காய்தூள்- 1 தேக்கரண்டி
ஓமம்- 1/2 தேக்கரண்டி
கசூரிமேத்தி- 2 தேக்கரண்டி
எலுமிச்சைபழச்சாறு- 1 பழம்
பிரவுன்பிரட்
நெய்- 2 தேக்கரண்டி
டாப்பிங் செய்ய
மாதுளை விதைகள்- 1/2 கப்
வெங்காயம்- 1 நறுக்கியது
தக்காளி- 1 விதை நீக்கி நறுக்கியது
பச்சை மிளகாய்- 2 விதை நீக்கி நறுக்கியது
கொத்தமல்லி இலை- 1/2 கப் நறுக்கியது
புதினா இலை- 1/2 கப் நறுக்கியது
சாட் மசாலா தூள்- 1/2 தேக்கரண்டி
பிரட் சாட் செய்ய
டோஸ்ட்டுபிரட்ஸ்லைஸ்
புதினாகொத்தமல்லிசட்னி
இனிப்புபுளிசட்னி
டாப்பிங்
சாட்மசாலாதூள்
சேவ்
செய்முறை
1. பாத்திரத்தில் கடலைமாவு, சோளமாவு, இஞ்சி பூண்டு விழுது,
சில்லி பேஸ்ட், உப்பு, சாட் மசாலாதூள், மாங்காய்தூள், ஓமம், கசூரிமேத்தி, எலுமிச்சை பழச்சாறு மற்றும் தண்ணீர் சேர்த்து கட்டி இன்றி கரைக்கவும்.
2. பிரட்'டை வட்ட வடிவில் வெட்டவும்.
3. நறுக்கிய பிரட்துண்டை கரைத்தமாவில் பிரட்டி, பேனில் நெய் ஊற்றி டோஸ்ட் செய்யவும்.
4. டாப்பிங் செய்ய, பாத்திரத்தில், மாதுளை விதைகள், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை, புதினா இலை, சாட் மசாலாதூள் சேர்த்து கிளறவும்.
5. பிரட் சாட் செய்ய, டோஸ்ட்டு பிரட்ஸ்லைஸ் மீது, புதினா கொத்தமல்லி சட்னி, இனிப்பு புளிசட்னி, டாப்பிங்கை வைக்கவும்.
6. கடைசியாக சிறிதளவு சாட்மசாலாதூள் மற்றும் சிறிதளவு சேவ்தூவிபரிமாறவும்
No comments:
Post a Comment