Tuesday, June 15, 2021

சில்லி மீன் ரெசிபி


 
















தேவையான பொருட்கள் 

மீனைஊறவைக்க



கொடுவாமீன்- 1/2 கிலோ

உப்பு- 1/2 தேக்கரண்டி

மிளகு- 1/2 தேக்கரண்டி

மிளகாய்தூள்- 2 தேக்கரண்டி

சோயாசாஸ்- 1 தேக்கரண்டி

முட்டை- 1

சோளமாவு- 3 தேக்கரண்டி

எண்ணெய்பொரிப்பதற்கு


சில்லிமீன்செய்ய



எண்ணெய்- 1 மேசைக்கரண்டி

பூண்டுநறுக்கியது

இஞ்சிநறுக்கியது

வெங்காயம்- 1 கப்பெரிதாகநறுக்கியது

குடைமிளகாய்- 1 பெரிதாகநறுக்கியது

வினிகர்- 1 தேக்கரண்டி

சோயாசாஸ்- 1 1/2 தேக்கரண்டி

சில்லிசாஸ்- 2 மேசைக்கரண்டி

தக்காளிகெட்சப்- 2 மேசைக்கரண்டி

உப்பு- 1/4 தேக்கரண்டி

மிளகுதூள்- 1/2 தேக்கரண்டி

வெங்காயத்தாள்வெங்காயம்

வெங்காயத்தாள்கீரை 

மிளகாய்தூள்- 1/2 தேக்கரண்டி

பழுத்தசிவப்புமிளகாய்நறுக்கியது


செய்முறை



1. மீனை சிறுசிறு துண்டுகளாக வெட்டி எடுத்து கொள்ளவும்.



2. அடுத்து மீனுடன்உப்புமிளகுதூள்மிளகாய்தூள்,  சோயாசாஸ் சேர்த்து நன்கு கலந்து 10 நிமிடம் ஊறவிடவும்.



3. பின்பு முட்டையின் வெள்ளை மற்றும் மஞ்சள் கருவை தனித்தனியே பிரித்துவெள்ளை கருவை மீனுடன் சேர்த்து கலந்துகொள்ளவும்.



4. அதனுடன் சோளமாவையும் சேர்த்து நன்கு கலந்து சூடான  எண்ணெயில் மிதமான சூட்டில் நிமிடம் பொன்னிறமாகும்  வரை பொரித்தெடுக்கவும்.



5. கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய பூண்டுஇஞ்சி,    பெரிதாக நறுக்கியவெங்காயம்பெரிதாக நறுக்கிய  குடை     மிளகாய் சேர்த்து நிமிடம்   வதக்கவும்.



6. பிறகுவினிகர்சோயாசாஸ்சில்லிசாஸ்தக்காளிகெட்சப்,  உப்புமிளகுதூள் சேர்த்து கலந்துவிடவும்.



7. அடுத்து வெங்காயத்தாள் வெங்காயம்வெங்காயத்தாள்   கீரை சேர்த்து கலந்து கொள்ளவும்.



8. சிறிதளவு தண்ணீர் மற்றும் மிளகாய்தூள் சேர்த்துகிளறி  விடவும்.




9. பிறகு இதில் நறுக்கிய சிவப்புமிளகாய்பொரித்த மீன் சேர்த்து நன்கு கலந்துஇறுதியாக சிறிது வெங்காயத்தாள் கீரை   சேர்த்து இறக்கினால்அருமையான சில்லி மீன் தயார்.



No comments:

Post a Comment