Monday, June 28, 2021

க்ரில்'டு சிக்கன் சான்விச் | Grilled Chicken Sandwich Recipe

 

தேவையானபொருட்கள் 



சிக்கனை க்ரில் செய்ய


சிக்கன்- 500 கிராம் 


காஷ்மீரி மிளகாய் தூள்- 1 தேக்கரண்டி   


பூண்டு- 6 பற்கள் நறுக்கியது


எலுமிச்சை சாறு- 1 பழம்


எண்ணெய்- 2 தேக்கரண்டி 


கொத்த மல்லி இலை


மிளகு தூள் 


உப்பு 


ஸ்பைசி மயோ செய்ய


மயோனைஸ்- 2 மேசைக்கரண்டி 


சில்லிஃப்ளேக்ஸ்- 1/2 தேக்கரண்டி 


ரெட்  சில்லி  சாஸ்  - 2 தேக்கரண்டி 


உப்பு- 1 சிட்டிகை 


க்ரில்'டு சிக்கன் சான்விச் செய்ய

கோதுமைபிரட் 


க்ரில்'டு சிக்கன் துண்டுகள் 


ஸ்பைசி மயோ


லெட்டூஸ்

 

தக்காளி துண்டு 


வெங்காய துண்டு 


சீஸ்ஸ் லைஸ்


வெண்ணைய்


செய்முறை 


1ஒரு பாத்திரத்தில் சிக்கன் துண்டுகளை எடுத்துஅதில் உப்பு,            மிளகுத்தூள்காஷ்மீரி மிளகாய்த்தூள்பூண்டுஎலுமிச்சைசாறு    மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கலந்து 30    நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.


2.  அடுத்து ஒருக்ரில் பேனில் எண்ணெய் தடவிஇதில் ஊறவைத்த   சிக்கன் துண்டுகளை போட்டு நன்கு வேகவைத்து எடுக்கவும்

 

3. வெந்த சிக்கன் துண்டுகளை 2 - 3 நிமிடங்களுக்கு ஆறவிடவும்


4. ஆறிய சிக்கன் துண்டுகளை சிறு துண்டுகளாக நறுக்கிக்                          கொள்ளவும்


5. அடுத்தஸ்பைசிமயோசெய்ய ஒரு சிறிய கிண்ணத்தில் மயொனைஸ் சில்லிஃப்ளேக்ஸ்ரெட் சில்லி சாஸ் மற்றும் சிறிதளவு உப்பு    சேர்த்து கலந்து கொள்ளவும்


6. இரண்டு கோதுமை பிரட்துண்டில் செய்த ஸ்பைசி மயோ போட்டு            பரப்பவும்


7. ஒரு துண்டின் மீது லெட்டூஸ்தக்காளி துண்டுகள் மற்றும் வெங்காயத் துண்டுகளை வைத்து அதன் மேல் செய்த சிக்கன் துண்டுகளை  வைக்கவும்


8. சிக்கன் துண்டுகளின் மீது சீஸ்ஸ்லைஸ் வைத்து அடுத்ததுண்டைவைத்து மூடவும் 


9. க்ரில்பேனில் தேவையான அளவு வெண்ணெயை தடவி செய்த    சாண்ட்விச்சை வைத்து இருபுறமும் பொன்னிறமாகும் வரை டோஸ்ட்செய்யவும் 


10. அருமையான  சிக்கன் சான்விச் தயார்.

No comments:

Post a Comment