Saturday, August 27, 2022

தண்டாய் | Thandai recipe


 தண்டாய் | Thandai 


        தேவையான பொருட்கள்


பால் - 1 1/2 லிட்டர்

குங்குமப்பூ

பாதாம் - 1/4 கப்

முந்திரி பருப்பு - 1/4 கப்

பிஸ்தா - 1/4 கப்

முலாம்பழம் விதைகள் - 1/4 கப்

கசகசா - 1 1/2 மேசைக்கரண்டி

சோம்பு - 2 மேசைக்கரண்டி

மிளகு - 2 தேக்கரண்டி

ஏலக்காய் - 1 தேக்கரண்டி

சூடான தண்ணீர்

காய்ந்த ரோஜா இதழ்கள்

சக்கரை - 3/4 கப்

ரோஸ் எசென்ஸ் - 1/4 தேக்கரண்டி


            செய்முறை

1. தண்டாய் செய்வதற்கு பாலை கொதிக்க வைத்து அதில் குங்குமப்பூ சேர்த்து கொதிக்கவைத்து இறக்கிவைக்கவும்.


2. பின்பு ஒரு பாத்திரத்தில் பாதாமை சூடான தண்ணீரில் 6 மணிநேரம் ஊறவைக்கவும்.


3. மற்றோரு பாத்திரத்தில் முந்திரி, பிஸ்தா, முலாம்பழ விதைகள், கசகசா, சோம்பு, மிளகு, ஏலக்காயை சேர்த்து சூடான தண்ணீரில் 6 மணிநேரம் ஊறவைக்கவும்.


4. ஊறவைத்த பாதாமை தோல்நீக்கி வைக்கவும்.


5. ஊறவைத்த மற்ற பொருட்களை நீர் இன்றி மிக்ஸியில் போட்டு, தோல்நீக்கிய பாதாம் மற்றும் காய்ந்த ரோஜா இதழ்கள் சேர்த்து தண்ணீர் அல்லது பால் சேர்த்து விழுதாக அரைக்கவும்.


6. ஒரு அகலமான கடாயில் குங்குமப்பூ சேர்த்த பாலை ஊற்றி அதில் அரைத்த விழுதை சேர்த்து நன்கு கலந்துவிடவும்.


7. பின்பு சர்க்கரை சேர்த்து கலந்து, இறுதியாக ரோஸ் எஸ்சென்ஸ்சை சேர்த்து கிளறி ஆறவிடவும்.


8. ஆறியதும் பிரிட்ஜில் வைத்து, குங்குமப்பூ, ரோஜா இதழ்கள் தூவி பரிமாறவும்.

No comments:

Post a Comment