Thursday, September 1, 2022

பன்னீர் குர்ச்சன் | Paneer Khurchan recipe

 


தேவையான பொருட்கள்


பன்னீர் - 200 கிராம்

வெண்ணெய் - 1 மேசைக்கரண்டி

சீரகம் - 1/4 தேக்கரண்டி

வெங்காயம் - 2 மெல்லியதாக நறுக்கியது

பச்சை குடைமிளகாய் - 1 மெல்லியதாக நறுக்கியது

தக்காளி - 2 நறுக்கியது

பெருங்காயத்தூள் - 1 /4 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

சீரக தூள் - 1 தேக்கரண்டி

தனியா தூள் - 1 தேக்கரண்டி

காஷ்மீரீ மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

இஞ்சி - நீளவாக்கில் நறுக்கியது

கசூரி மேத்தி 

பிரெஷ் கிரீம் (விருப்பப்பட்டால்)


            செய்முறை


1. சூடான கடாயில் வெண்ணெய், சீரகம், வெங்காயம் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

2. பின்பு பச்சை குடைமிளகாய் சேர்த்து 3 நிமிடம் வதக்கவும், இதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்.

3. பிறகு பெருங்காயத்தூள், மஞ்சள் தூள், சீரக தூள், தனியா தூள், காஷ்மீரி மிளகாய் தூள், உப்பு சேர்த்து கலந்து விடவும்.

4. பின்பு இதில் பன்னீரை சேர்த்து கிளறவும். பிறகு நறுக்கிய இஞ்சி, கசூரி மேத்தி மற்றும் பிரெஷ் கிரீமையும் சேர்த்து கலந்து இறக்கினால், சூடான பன்னீர் குர்ச்சன் தயார்.



No comments:

Post a Comment