Monday, June 14, 2021

பன்னீர் சீஸ் பால்ஸ்

தேவையான பொருட்கள்

பன்னீர்- 200 கிராம் 

வெங்காயம்- 1 பொடியாக நறுக்கியது

பச்சைமிளகாய்- 1 விதை நீக்கி பொடியாக நறுக்கியது

கொத்தமல்லி இலை

உப்பு- 1/2 தேக்கரண்டி 

காஷ்மீரி மிளகாய் தூள்- 1/2 தேக்கரண்டி 

சாட் மசாலா- 1/2 தேக்கரண்டி 

கடலை மாவு- 2 மேசைக்கரண்டி 

சோள மாவு- 1 மேசைக்கரண்டி 

ப்ரோசஸ்டு சீஸ் 

பிரட் தூள் 

சோள மாவு- 3 தேக்கரண்டி

எண்ணெய் 


செய்முறை


1. ஒரு பாத்திரத்தில் துருவிய பன்னீர்வெங்காயம்பச்சைமிளகாய்கொத்தமல்லி இலைஉப்புகாஷ்மீரி மிளகாய் தூள்,   சாட் மசாலா மற்றும் கடலைமாவு போட்டுசப்பாத்தி மாவு   பதத்திற்கு நன்கு பிசைந்து கொள்ளவும்


2. செய்த பன்னீர்கலவையிலிருந்து சிறிய அளவு எடுத்து இதனுள் ஒரு சிறிய துண்டு சீஸ் வைத்து மூடி நான்கு உருண்டையாக உருட்டவும்.


3. ஒரு சிறிய கிண்ணத்தில் சோளமாவும் தண்ணீரும் கலந்து   கரைத்து வைத்துக் கொள்ளவும்.


4. பன்னீர் பால்ஸை சோளமாவு கலவையில் முக்கிபிறகு பிரட்தூளில் பிரட்டிஃப்ரீசரில்10 நிமிடங்களுக்கு வைத்து எடுக்கவும்.


5. பின்பு ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றிகுறைந்த தீயில் சூடாக்கவும்.


6. எண்ணெய் சூடானதும்ஃப்ரீஸரில் உள்ள பன்னீர் பால்ஸை   எண்ணெயில் போட்டு மிதமான சூட்டில் பொன்னிறமாகும்   வரை பொரித்துஎடுக்கவும்.


7. பன்னீர் சீஸ்பால்ஸ் தயார்.


 

No comments:

Post a Comment