தேவையானபொருட்கள்
பாதாம்
பிஸ்தா
வால் நட்ஸ்
முந்திரி
திராட்சை
பேரீச்சம் பழம்- 7 விதைநீக்கியது
பால்- 3 கப்
ஏலக்காய் தூள்- 1/2 தேக்கரண்டி
குங்குமபூ - அலங்கரிக்க
செய்முறை
1. பாதாம், பிஸ்தா, வால்நட், முந்திரிமற்றும்திராட்சை, இவை அனைத்தையும் கலந்து ஒரு கப் அளவு எடுத்து 2 மணி நேரம் தண்ணீரில்ஊறவைக்கவும்
2. அடுத்து பேரீச்சம்பழத்தை கொட்டை நீக்கி தண்ணீரில் 2 மணி நேரம் ஊறவைக்கவும்
3. 2 மணி நேரம் கழித்து ஒரு மிக்ஸி ஜாரில் ஊறிய பருப்புகள், திராட்சை மற்றும் பேரீச்சம்பழத்தை போட்டு சிறிதளவு பால் ஊற்றிமையாக அரைக்கவும்
4. அரைத்த விழுதுடன் ஐஸ்கட்டி, ஏலக்காய்த்தூள் மற்றும் மீதமுள்ள பாலை ஊற்றி நன்கு அரைக்கவும்
5. அருமையான ட்ரை ஃப்ரூட் மில்க் ஷேக் தயார்
6. இதை சிறிது குங்குமப்பூ போட்டு அலங்கரித்து பரிமாறவும்
No comments:
Post a Comment