சிக்கன் கலவை செய்ய
எழும்பில்லாத சிக்கன்- 200 கிராம்
பூண்டு- 3 பற்கள் பொடியாக நறுக்கியது
இஞ்சி- 1/2" துண்டு பொடியாக நறுக்கியது
லைட்சோயாசாஸ்- 2 தேக்கரண்டி
உப்பு- 1/2 தேக்கரண்டி
மிளகுதூள்
நல்லெண்ணெய்- 2 தேக்கரண்டி
வெங்காயத்தாள்
வெங்காயம் பொடியாக நறுக்கியது
வெங்காயத்தாள் கீரை பொடியாக நறுக்கியது
வான்டன்சீட்செய்ய
மைதா- 1 கப்
உப்பு- 1/2 தேக்கரண்டி
எண்ணெய்- 2 மேசைக்கரண்டி
தண்ணீர்
செய்முறை
1. மிக்ஸியில் எழும்பில்லாத சிக்கன், பூண்டு, இஞ்சி, லைட் சோயா சாஸ், உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து, விட்டு விட்டு அரைத்துக் கொள்ளவும்.
2. அரைத்த சிக்கனை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி, அதில் நல்லெண்ணெய், வெங்காயத்தாள் வெங்காயம், வெங்காயத்தாள் கீரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
3. அடுத்து வான்டன் சீட் செய்ய ஒரு பாத்திரத்தில், மைதா, உப்பு, எண்ணெய் சேர்த்து முதலில் கலந்து கொள்ளவும். பிறகு சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் நன்கு பிசையவும். பிறகு ஈரத்துணியால் மூடி அரைமணி நேரம் ஊறவிடவும்.
4. பின் மாவை 2 நிமிடம் நன்கு பிசையவும். பிசைந்த மாவை சிறு சிறுஉருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும். பிறகு சப்பாத்திகட்டையில் சிறிது மைதா மாவை தூவி, உருட்டிய உருண்டையை வைத்து மெல்லியதாக தேய்க்கவும்.
5. தேய்த்தமாவை ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கிவைத்து, பின் அளந்து சதுரமாக வெட்டிக்கொள்ளவும்.
6. அடுத்து வான்டன் ஷீட்டின் மேல் அரைத்த சிக்கனை வைத்து எல்லாப் பக்கங்களையும் சேர்த்து மூடவும்.
7. ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, தண்ணீர் சூடானதும், அதில் மூங்கில் கூடையில் வாழையிலையை வைத்து அதின் மேல் சிக்கன் திம்சம்மை வைத்து மூடி 15 நிமிடம் ஆவியில் வேகவைத்து இறக்கினால் சிக்கன் திம்சம் தயார்.
No comments:
Post a Comment