தேவையானபொருட்கள்
சிக்கனைஊறவைக்க
சிக்கன்தொடை- 2
எலுமிச்சை பழச்சாறு- 1 பழம்
புளிப்பில்லாத தயிர்- 1/2 கப்
பிரெஷ்கிரீம்- 1 மேசைக்கரண்டி
புதினாஇலை
கொத்தமல்லி இலை
உப்பு- 1 தேக்கரண்டி
மசாலாஅரைக்க
வெங்காயம்- 2 மெல்லியதாக நறுக்கியது
இஞ்சி- 1 பெரிய துண்டு பொடியாக நறுக்கியது
பூண்டு- பொடியாகநறுக்கியது
பச்சைமிளகாய்- 2 நறுக்கியது
சீரகம்- 1/2 தேக்கரண்டி
சோம்பு- 1/2 தேக்கரண்டி
மஞ்சள்தூள்- 1/4 தேக்கரண்டி
மிளகாய்தூள்- 2 தேக்கரண்டி
கரம்மசாலாதூள்- 1 தேக்கரண்டி
தனியாதூள்- 1 தேக்கரண்டி
நெய்- சிறிதளவு
உப்பு- 1/4 தேக்கரண்டி
பான்ரோஸ்ட்சிக்கன்செய்ய
நெய்- 1 மேசைக்கரண்டி
ஊறவைத்த சிக்கன்
செய்முறை
1. ஒரு பாத்திரத்தில் சிக்கனை கீறி சேர்த்து, அதில் உப்பு, ஒரு எலுமிச்சைபழத்தின் சாறு, புளிப்பில்லாததயிர், பிரெஷ் கிரீம் சேர்த்து கலந்து கொள்ளவும்.
2. ஒரு கடாயில் சிறிதளவு நெய் சேர்த்து, நறுக்கிய வெங்காயம், நறுக்கிய இஞ்சி, நறுக்கிய பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
3. வெங்காயம் பாதி வதங்கியதும், சீரகம், சோம்பு, மஞ்சள்தூள், மிளகாய்தூள், கரம்மசாலாதூள்,தனியாதூள் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
4. பிறகு வதக்கிய மசாலாவை ஆறவிட்டு, உப்பு சேர்த்து தண்ணீர் இன்றி கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
5. பின் சிக்கனில் அரைத்தமசாலா, புதினா மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கலந்து 2 மணி நேரம் ஊறவிடவும்.
6. சிக்கனை ரோஸ்ட் செய்ய, கடாயில் நெய் ஊற்றி, அதில் சிக்கனை சேர்த்து மூடி 10 நிமிடம் வேகவிடவும். 10 நிமிடத்திற்கு பிறகு சிக்கனை திருப்பி அதின் மேல் சிறிதுஊற வைத்த மசாலாவை தடவி 10 நிமிடம் மூடி வேகவிடவும்.
7.10 நிமிடம் கழித்து சிக்கனை திருப்பி மூடி மற்றோரு 10 நிமிடம் வேக வைத்து இறக்கினால்,
சிக்கன்ரோஸ்ட்தயார்.
No comments:
Post a Comment