தேவையானபொருட்கள்
சிக்கன் - 1 கிலோ
எலுமிச்சைசாறு- 1 பழம்
தயிர்- 2 தேக்கரண்டி
உப்பு- 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள்- 1/4 தேக்கரண்டி
சீரகம்தூள்- 1 தேக்கரண்டி
மல்லிதூள்- 1 தேக்கரண்டி
சாட்மசாலா- 1/2 தேக்கரண்டி
கரம்மசாலா- 1 தேக்கரண்டி
மிளகாய்தூள்- 2 தேக்கரண்டி
சோளமாவு- 1 மேசைக்கரண்டி
கடலைமாவு- 2 மேசைக்கரண்டி
எண்ணெய்
மசாலாவிழுதுஅரைக்க
வெங்காயம்- 1
பூண்டு- 5 பற்கள்
இஞ்சி
பச்சைமிளகாய்- 1
செய்முறை
1. சிக்கன் வறுவல் செய்ய ஒரு மசாலா விழுது அரைக்க மிஸ்சியில் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பூண்டு பற்கள், இஞ்சி துண்டுகள், பச்சை மிளகாய் சேர்த்து விழுதாக அரைக்கவும்
2. அடுத்து ஒரு கிண்ணத்தில் சிக்கன் துண்டுகளை எடுத்து அதில் எலுமிச்சைசாறு, சிறிது தயிர், அரைத்த மசாலாவிழுது, தேவையான அளவு உப்பு, மஞ்சள்தூள், சீரகத்தூள், மல்லித்தூள், சாட் மசாலாதூள், கரம் மசாலாதூள், கஷ்மீரி மிளகாய்தூள், சோளமாவு, கடலை மாவு சேர்த்து நன்கு பிசைந்து முப்பது நிமிடத்திற்கு மூடிவைக்கவும்
3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் சூடேற்றிய பின்பு சிக்கன் துண்டுகளை சேர்த்து பத்து நிமிடத்திற்கு பொரிக்கவும்
4. பத்து நிமிடம் கழித்து இந்த சிக்கன் துண்டுகளை பாத்திரத்தில் வைத்து ஐந்து நிமிடம் மூடிவைக்கவும்
5. ஐந்து நிமிடம் கழித்து இந்த சிக்கன் துண்டை எண்ணையில் சேர்த்து முப்பது வினாடிபொரித்து சூடாக பரிமாறவும்
No comments:
Post a Comment