தேவையானபொருட்கள்
ஹக்கா நூடுல்ஸ்- 300 கிராம்
உப்பு
எண்ணெய்
சோளமாவு- 1/4 கப்
முட்டை கோஸ்- 1 கப் நறுக்கியது
வெங்காயம்- 2 நறுக்கியது
குடைமிளகாய்- 1/2 மெல்லியதாக நறுக்கியது
பச்சைமிளகாய்- 1 பொடியாக நறுக்கியது
வெங்காயத்தாள் கீரை
செஸ்வான் சாஸ்- 3 மேசைக்கரண்டி
தக்காளிகெட்சப்- 1 மேசைக்கரண்டி
எலுமிச்சைபழச்சாறு- 1/2 பழம்
செய்முறை
1. முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, தண்ணீர் கொதித்ததும் அதில் நூடுல்ஸை போடவும்.
2. நூடுல்ஸ் முக்கால் பாகம் வெந்ததும், அதை வடிகட்டி அதின் மேல் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கலந்துவிடவும்.
3. வடிகட்டிய நூடுல்ஸை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி, அதின்மேல் சோளமாவு தூவி கலந்துவிடவும்.
4. ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும், நூடுல்ஸை அதில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
5. பொரித்த நூடுல்ஸை சின்ன சின்ன துண்டுகளாக உடைத்து, அதனுடன் நறுக்கிய முட்டைகோஸ், நறுக்கிய வெங்காயம், மெல்லியதாக நறுக்கிய குடைமிளகாய், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்க்கவும்.
6. பிறகு செஸ்வான்சாஸ், தக்காளி கெட்சப் சேர்த்து நன்கு கலந்துவிடவும். இறுதியாகஇதில் எலுமிச்சை பழச்சாறு சேர்த்து கலந்து உடனே பரிமாறவும்.
No comments:
Post a Comment