Thursday, July 8, 2021

முட்டை சப்பாத்தி | Egg chapathi Recipe


 தேவையானபொருட்கள் 


சப்பாத்தி மாவு செய்ய 


கோதுமைமாவு- 1 1/2 கப் 


உப்பு- 1/4 தேக்கரண்டி 


எண்ணெய்- 1 தேக்கரண்டி 


வெந்நீர் 


முட்டை கலவை செய்ய 

முட்டை- 4


உப்பு- 1/4 தேக்கரண்டி

 

வெங்காயம் பொடியாக நறுக்கியது 


பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது 


பூண்டு பொடியாக நறுக்கியது

 

இஞ்சி பொடியாக நறுக்கியது 


கொத்த மல்லி இலை


செய்முறை 


1. ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவுஉப்புஎண்ணெய் போட்டு கலந்துதேவையான அளவு வெந்நீர் ஊற்றி மாவை நன்கு பிசைந்து 10 நிமிடங்களுக்கு மூடி வைக்கவும்.


2.10 நிமிடங்கள் கழித்து சிறிய உருண்டைகளாக பிரித்து சப்பாத்தி போல் தேய்த்து  கொள்ளவும்.


3. அடுத்து ஒரு பாத்திரத்தில் முட்டைஉப்புவெங்காயம்பச்சைமிளகாய்பூண்டு,   இஞ்சி மற்றும் கொத்தமல்லி சேர்த்து நன்கு அடித்து வைத்துக்கொள்ளவும்.


4. தவாவை சூடு செய்து செய்த சப்பாத்தியை போட்டு இருபுறமும் நெய் தடவி சுட்டெடுக்கவும்.


5. அடுத்து தவாவில் செய்து வைத்த முட்டை கலவையில் சிறிதளவு ஊற்றி அதன் மேல்செய்த சப்பாத்தியை வைத்து லேசாக அழுத்தவும்.


6. முட்டை சப்பாத்தி தயார்.


No comments:

Post a Comment