Monday, September 27, 2021

வீட்டில் செய்த ரோஸ் சிரப் | Homemade Rose Syrup


 தேவையானபொருட்கள்


தண்ணீர்- 2 கப்(500 மில்லி)


சர்க்கரை- 2 கப்


காய்ந்த ரோஜா இதழ்கள்- 2 மேசைக்கரண்டி


ரோஸ்கலர்- 2 துளிகள்


ரோஸ் எசென்ஸ்- 1/2 தேக்கரண்டி



செய்முறை

1. பாத்திரத்தில் தண்ணீர் சூடு செய்யவும்.


2. இதனுடன் சர்க்கரை சேர்த்து கரைக்கவும்.


3. சர்க்கரை  கரைந்தபின்மேலும் நிமிடம் கொதிக்கவிடவும்.


4. அடுத்து இதில் காய்ந்த ரோஜா இதழ்கள் சேர்த்து நிமிடம்


 கொதிக்கவிடவும்.

 

5. அடுத்து இதில் ரோஸ் கலர் சேர்த்து கலக்கவும்.


6. அடுப்பை அணைத்து விட்டுஇதில் ரோஸ் எசென்ஸ் சேர்க்கவும்.


7. ரோஸ்சிரப் பை  வடிகட்டி ஆறவிடவும்.


8. ரோஸ்சிரப்தயார்.

No comments:

Post a Comment