தேவையான பொருட்கள்
ஜெல்லி செய்ய
ஜெல்லிகிரிஸ்டல்- 1 பாக்கெட்
தண்ணீர்
ரோஸ் மில்க் செய்ய
பால்- 1/2 லிட்டர் கொதித்து ஆறியது
ரோஸ் சிரப்- 2 மேசைக் கரண்டி
சர்க்கரை- 1 1/2 மேசைக் கரண்டி
ராயல்ஃபலூடாசெய்ய
ஸ்ட்ராபெரிஜெல்லி
குளீருட்டியரோஸ்மில்க்
சேமியா
சப்ஜாவிதைகள்
வெண்ணிலாஐஸ்கிரீம்
பாதாம், பிஸ்தா
டுட்டிஃரூட்டி
செர்ரிபழம்
செய்முறை
1. ஜெல்லி செய்ய, பாக்கெட்டில் உள்ள குறிப்புகளை பின் பற்றி ஜெல்லியை கரைக்கவும். 45 நிமிடம்வைக்கவும்.
2. ரோஸ்மில்க்செய்ய, பால் கொதிக்கவைத்து, ஆற வைக்கவும்.
3. ஆறிய பாலில் ரோஸ் சிரப் மற்றும் சர்க்கரை சேர்த்துகலக்கவும்.
4. அடுத்து சிறிதளவு தண்ணீர் கொதிக்க வைத்து, சேமியாவை வேகவைத்து, வடிகட்டி எடுத்துவைக்கவும்.
5. சப்ஜா விதைகளை தண்ணீரில் 5 நிமிடம் ஊற வைக்கவும்
6. ஃபலூடா செய்ய, முதலில் ஜெல்லி, வேக வைத்த சேமியா போடவும்.
7. இதன் மேல் ரோஸ் சிரப் ஊற்றி, சப்ஜா விதைகள் போடவும்.
8. அடுத்து குளீருட்டிய ரோஸ் மில்க் ஊற்றவும்.
9. வெண்ணிலா ஐஸ் கிரீம் வைக்கவும்.
10. அடுத்து நறுக்கிய பாதாம், பிஸ்தா போடவும். இத மேல் நறுக்கிய ஆப்பிள், வாழைப்பழம் போடவும்.
11. அடுத்து ஜெல்லி, சப்ஜா விதைகள், ஐஸ்கிரீம்
போடவும்.
12. கடைசியாக, பாதாம், பிஸ்தா, டுட்டிஃரூட்டி, செர்ரி பழம் போட்டு பரிமாறவும்