தேவையானபொருட்கள்
வெண்ணிலா ஐஸ்கிரீம்
ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம்
பட்டர்ஸ்காட்ச் ஐஸ்கிரீம்
ஆப்பிள் நறுக்கியது
வாழைப்பழம் நறுக்கியது
பச்சை திராட்சை நறுக்கியது
முந்திரி பருப்பு நறுக்கியது
உலர்ந்த திராட்சை
வேகவைத்த சேமியா
ஸ்ட்ராபெர்ரி ஜெல்லி
செர்ரி
செய்முறை
1. ஆப்பிள், வாழைப்பழம், திராட்சைஆகியவற்றை சிறிதாக நறுக்கி எடுத்து வைக்கவும்.
2. பரிமாறும் கிளாஸ்ஸில், வெண்ணிலா ஐஸ்கிரீமைபோட்டு, நறுக்கிய பழங்களை போடவும்.
3. அடுத்து நறுக்கிய முந்திரி பருப்பு, உலர்ந்த திராட்சையைபோட்டு, ஸ்ட்ராபெர்ரி ஐஸ் கிரீமை போடவும்.
4. அடுத்து சிறிதளவு ஸ்ட்ராபெர்ரி ஜெல்லி, வேகவைத்த சேமியாவை சேர்க்கவும்.
5. இன்னொருமுறை நறுக்கிய பழங்கள், முந்திரி, திராட்சை சேர்க்கவும்.
6. இறுதியாக பட்டர்ஸ்காட்ச் ஐஸ்கிரீம் வைத்து, செர்ரியை வைக்கவும்.
7. கட்பட் ஐஸ்கிரீம் தயார்.