மசாலா விழுது அரைக்க
தேங்காய்- 1/2 கப்துருவியது
பூண்டு- 5 பற்கள்நறுக்கியது
சீரகம்- 1 தேக்கரண்டி
காய்ந்தமிளகாய்- 3
பச்சைமிளகாய்- 2
மஞ்சள்தூள்- 1/4 தேக்கரண்டி
தண்ணீர்
தேவையான பொருட்கள்
தயிர்- 1/2 லிட்டர்
தண்ணீர்
உப்பு
தாளிப்பு செய்ய
தேங்காய்எண்ணெய்
கடுகு- 1/2 தேக்கரண்டி
சீரகம்- 1/2 தேக்கரண்டி
பெருங்காயத்தூள்
காய்ந்தமிளகாய்- 1
கறிவேப்பிலை
இஞ்சி- 1 துண்டு பொடியாக நறுக்கியது
பெரிய வெங்காயம்- 1 நறுக்கியது
தயிர் கலவை
செய்முறை:
1. மிக்ஸியில் துருவிய தேங்காய், பூண்டு, சீரகம், காய்ந்த மிளகாய் மற்றும் பச்சை மிளகாய் மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து தண்ணீர் இன்றி அரைக்கவும். பின்பு சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
2. ஒரு கிண்ணத்தில் தயிர், அரைத்த மசாலா விழுது மற்றும் தண்ணீர், உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். தயிர் புதியதாகவோ அல்லது இனிப்பாகவோ இருக்கக்கூடாது. புளிப்பாக இருக்க வேண்டும்.
3. ஒரு கடாயை சூடாக்கவும், தேங்காய் எண்ணெய், கடுகு, சீரகம், பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி, வெங்காயம் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
4. அடுப்பை அணைத்துவிட்டு, கடாயில் தயிர் கலவையை சேர்க்கவும்.
5. மோர் குழம்பை சூடான சாதத்துடன், ஊறுகாய் மற்றும் அப்பளத்துடன் பரிமாறவும்.