Monday, July 5, 2021

மோர் குழம்பு | Mor Kuzhambu Recipe


மசாலா விழுது அரைக்க


தேங்காய்- 1/2 கப்துருவியது


பூண்டு- 5 பற்கள்நறுக்கியது


சீரகம்- 1 தேக்கரண்டி


காய்ந்தமிளகாய்- 3


பச்சைமிளகாய்- 2


மஞ்சள்தூள்- 1/4 தேக்கரண்டி


தண்ணீர்


தேவையான பொருட்கள்


தயிர்- 1/2 லிட்டர்


தண்ணீர்


உப்பு


தாளிப்பு செய்ய


தேங்காய்எண்ணெய்


கடுகு- 1/2 தேக்கரண்டி


சீரகம்- 1/2 தேக்கரண்டி


பெருங்காயத்தூள்


காய்ந்தமிளகாய்- 1


கறிவேப்பிலை


இஞ்சி- 1 துண்டு பொடியாக நறுக்கியது 


பெரிய வெங்காயம்- 1 நறுக்கியது


தயிர் கலவை


செய்முறை:



1. மிக்ஸியில் துருவிய தேங்காய்பூண்டுசீரகம்காய்ந்த மிளகாய் மற்றும் பச்சை   மிளகாய் மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து தண்ணீர் இன்றி அரைக்கவும்பின்பு சிறிது    சிறிதாக தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.


2. ஒரு கிண்ணத்தில் தயிர்அரைத்த மசாலா விழுது மற்றும் தண்ணீர்உப்பு சேர்த்து   நன்கு கலக்கவும்தயிர் புதியதாகவோ அல்லது இனிப்பாகவோ இருக்கக்கூடாது.    புளிப்பாக இருக்க வேண்டும்.


3. ஒரு கடாயை சூடாக்கவும்தேங்காய் எண்ணெய்கடுகுசீரகம்பெருங்காயத்தூள்காய்ந்த மிளகாய்கறிவேப்பிலைஇஞ்சிவெங்காயம் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.


4. அடுப்பை அணைத்துவிட்டுகடாயில் தயிர் கலவையை சேர்க்கவும்.


5. மோர் குழம்பை சூடான சாதத்துடன்ஊறுகாய் மற்றும் அப்பளத்துடன் பரிமாறவும்.


Thursday, July 1, 2021

மசாலா மேக்ரோனி | Masala Macroni Recipe


 தேவையானபொருட்கள்


மேக்ரோனி  - 1 1/2 கப் 


இஞ்சி- 1 தேக்கரண்டி நறுக்கியது 


பூண்டு- 1 தேக்கரண்டி நறுக்கியது 


பச்சைமிளகாய்- 2 நறுக்கியது 


பெரியவெங்காயம்- 1 நறுக்கியது 


தக்காளி- 2 நறுக்கியது 


கேரட்- 1 நறுக்கியது 


பீன்ஸ் நறுக்கியது 


குடைமிளகாய்- 1/2 நறுக்கியது 


இட்டாலியன்சீசனிங்- 1 தேக்கரண்டி 


சில்லிஃப்ளேக்ஸ்- 1 தேக்கரண்டி 


ரெட் சில்லி சாஸ்- 2 மேசைக்கரண்டி 


தக்காளி கெட்சப்- 1/4 கப் 


மொஸெரெல்லா சீஸ் துருவியது 


எண்ணெய் 


உப்பு 


தண்ணீர் 


கொத்தமல்லி இலை


செய்முறை 



1. ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க   விடவும்.


2. தண்ணீர் கொதித்த பின் இதில் சிறிதளவு உப்பு சேர்த்து மேக்ரோனியை வேக வைத்து எடுக்கவும்.


3. வேக வைத்த பாஸ்தாவை வடிகட்டி எண்ணெய் ஊற்றி குளிக்க   வைத்துக் கொள்ளவும்.


4. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிஅதில் வெங்காயம்இஞ்சிபூண்டுமற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்வெங்காயம் வதங்கியதும் அதில் தக்காளி மற்றும் உப்பு  சேர்த்து நன்கு வதக்கவும்.


5. தக்காளி வதங்கிய பின் குடைமிளகாய்கேரட் மற்றும் பீன்ஸ் சேர்த்து கிளறவும்.


6. தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கடாயை வைத்து 10 நிமிடங்களுக்கு காய்கறிகளை வேக வைக்கும்.


7. காய்கறிகள் வெந்த பின் சில்லிஃப்ளேக்ஸ்இட்டாலியன் சீசனிங்,   ரெட்சில்லி சாஸ்கெட்சப் மற்றும் மொஸெரெல்லாசீஸ் சேர்த்து கிளறவும்.


8. அடுத்து வேக வைத்த பாஸ்தாவை போட்டு நன்கு கலக்கவும்.


9. இறுதியாககொத்தமல்லிஇலைதூவிஇறக்கவும்.


10. மசாலாமக்ரோனிதயார்.

சிக்கன் 65 | Chicken 65 Recipe


 தேவையானபொருட்கள்



சிக்கன்- 300 கிராம் (எலும்பில்லாத)


இஞ்சி பூண்டு விழுது- 2 தேக்கரண்டி 


மஞ்சள் தூள்- 1/4 தேக்கரண்டி 


உப்பு தேவைக்கு ஏற்ப

 

மிளகாய் தூள்- 1 மேசைக்கரண்டி 


தனியா தூள்- 1 தேக்கரண்டி 


சீரகதூள்- 1 தேக்கரண்டி 


மிளகு தூள்- 1/2 தேக்கரண்டி 


கரம் மசாலா- 1/2 தேக்கரண்டி 


முட்டை- 1


அரிசி மாவு- 1 மேசைக்கரண்டி 


சோள மாவு- 2 மேசைக்கரண்டி 


 ஃபுட்களர்- 1 சிட்டிகை (விரும்பினால்)


எண்ணெய் 


பூண்டுநறுக்கியது


இஞ்சி நீளமாக நறுக்கியது



பச்சை மிளகாய்- 5 கீறியது


கறிவேப்பில்லை 


            செய்முறை



1. ஒரு பாத்திரத்தில் சிறிதாக நறுக்கிய எலும்பில்லாத சிக்கன் துண்டுகள் எடுத்துக்கொள்ளவும்.


2. இதனுடன் இஞ்சி பூண்டு விழுதுமஞ்சள்தூள்உப்புமிளகாய்த்தூள்தனியாத்தூள்,  சீரகத்தூள்மிளகுத்தூள்கரம் மசாலாத்தூள் சேர்த்து பிசையவும்.


3. அடுத்து இதில் ஒரு அடித்த முட்டை போட்டு கலந்து கொள்ளவும்.


4. இறுதியாக  இதில்  அரிசிமாவு கடலைமாவு  மற்றும்  விரும்பினால்  ஒரு  சிட்டிகைஅளவு  ஃபுட்கலர்  சேர்த்து  நன்கு  கலந்துகொள்ளவும்.


5. சிக்கனை 30  நிமிடங்களுக்கு ஊறவைக்கவும்.


6. ஒரு  கடாயில்  தேவையான  அளவு எண்ணெய் ஊற்றிஊறிய சிக்கன் துண்டுகளை  மிதமான சூட்டில் பொன்னிறமாகும் வரை பொரித்தெடுக்கவும்.


7. அடுத்து  ஒரு  கடாயில்  சிறிதளவுஎண்ணெய்  ஊற்றிஇதில்பூண்டுஇஞ்சிகீறிய   மிளகாய் மற்றும் கருவேப்பிலை சேர்த்து லேசாக வதக்கிஇதனுடன் பொரித்த    சிக்கன் துண்டுகளை போட்டு கிளறவும்.

கஸ்டர்டு டெஸட் கப்ஸ் | Custard Dessert Cups Recipe


 தேவையானபொருட்கள்



டைஜெஸ்டிவ்பிஸ்கட்- 15 


நெய்- 3 தேக்கரண்டி 


வெண்ணிலா கஸ்டர்டு பவுடர்- 4 மேசைக்கரண்டி 


கொதித்து ஆறிய பால்- 1/4 கப்


கொழுப்புள்ள பால்- 1/2 லிட்டர்


சர்க்கரை- 4 மேசைக்கரண்டி


மாதுளைவிதைகள்


கிவி பழத்துண்டுகள்


திராச்சை



செய்முறை


1. முதலில் பிஸ்கட்டுகளை மிக்ஸியில் போட்டு பொடியாக அரைக்கவும்


2. அரைத்த பிஸ்கட்டுகளை ஒரு கிண்ணத்தில் போட்டுஇதில் நெய் ஊற்றி பிசையவும்


3. நான்கு கிளாஸ்களில்செய்த பிஸ்கெட்கலவையில் போட்டு சமன் செய்து பிரிட்ஜில்வைக்கவும்


4. ஒரு கிண்ணத்தில்கஸ்டர்டு பவுடர் மற்றும் கொதித்து ஆறிய பால் சிறிதளவு ஊற்றிகரைக்கவும்


5. கடாயில் முழுக்கொழுப்புள்ள  பாலை சூடாக்கிஅதில் கஸ்டர்ட் கலவையை போட்டு கலக்கவும்


6. அடுப்பை  குறைந்த  தீயில்  வைத்துகஸ்டர்டு  கெட்டியாகும் வரை கொதிக்கவிட்டுஇறக்கவும்.


7. கஸ்டர்டு  கலவையை  நிமிடங்களுக்கு ஆறவிடவும்


8. கஸ்டர்டு ஆறும் பொழுது கைவிடாமல் கிண்டவேண்டும்


9. பிரிட்ஜில்  வைத்த  கிளாஸ்  கப்பைஎடுத்து பிஸ்கட்  கலவையின்  மேல்கஸ்டர்டுகலவையை  ஊற்றி மணிநேரம்  பிரிட்ஜில்வைக்கவும்


10.2 மணி  நேரம்  கழித்து  இதன்மேல்மாதுளை  விதைகள் கிவி  பழத்துண்டுகள் மற்றும்  திராட்சை  போட்டு  பரிமாறவும்