Thursday, July 8, 2021

நூடுல்ஸ் பேல் | Crispy Noodles Bhel Recipe



தேவையானபொருட்கள்


ஹக்கா நூடுல்ஸ்- 300 கிராம்


உப்பு


எண்ணெய்


சோளமாவு- 1/4 கப்


முட்டை கோஸ்- 1 கப் நறுக்கியது


வெங்காயம்- 2 நறுக்கியது


குடைமிளகாய்- 1/2 மெல்லியதாக நறுக்கியது


பச்சைமிளகாய்- 1 பொடியாக நறுக்கியது


வெங்காயத்தாள் கீரை


செஸ்வான் சாஸ்- 3 மேசைக்கரண்டி


தக்காளிகெட்சப்- 1 மேசைக்கரண்டி


எலுமிச்சைபழச்சாறு- 1/2 பழம்


செய்முறை


1. முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றிதண்ணீர் கொதித்ததும் அதில் நூடுல்ஸை போடவும்.


2. நூடுல்ஸ் முக்கால் பாகம் வெந்ததும்அதை வடிகட்டி அதின்  மேல் சிறிதளவு   எண்ணெய் ஊற்றி கலந்துவிடவும்.


3. வடிகட்டிய நூடுல்ஸை ஒரு பாத்திரத்திற்கு மாற்றிஅதின்மேல்  சோளமாவு தூவி கலந்துவிடவும்.


4. ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும்நூடுல்ஸை அதில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.


5. பொரித்த நூடுல்ஸை சின்ன சின்ன துண்டுகளாக உடைத்துஅதனுடன் நறுக்கிய  முட்டைகோஸ்நறுக்கிய வெங்காயம்மெல்லியதாக நறுக்கிய குடைமிளகாய்பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்க்கவும்.


6. பிறகு  செஸ்வான்சாஸ்தக்காளி கெட்சப் சேர்த்து நன்கு கலந்துவிடவும்இறுதியாகஇதில் எலுமிச்சை பழச்சாறு  சேர்த்து கலந்து உடனே பரிமாறவும்.

 

முட்டை சப்பாத்தி | Egg chapathi Recipe


 தேவையானபொருட்கள் 


சப்பாத்தி மாவு செய்ய 


கோதுமைமாவு- 1 1/2 கப் 


உப்பு- 1/4 தேக்கரண்டி 


எண்ணெய்- 1 தேக்கரண்டி 


வெந்நீர் 


முட்டை கலவை செய்ய 

முட்டை- 4


உப்பு- 1/4 தேக்கரண்டி

 

வெங்காயம் பொடியாக நறுக்கியது 


பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது 


பூண்டு பொடியாக நறுக்கியது

 

இஞ்சி பொடியாக நறுக்கியது 


கொத்த மல்லி இலை


செய்முறை 


1. ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவுஉப்புஎண்ணெய் போட்டு கலந்துதேவையான அளவு வெந்நீர் ஊற்றி மாவை நன்கு பிசைந்து 10 நிமிடங்களுக்கு மூடி வைக்கவும்.


2.10 நிமிடங்கள் கழித்து சிறிய உருண்டைகளாக பிரித்து சப்பாத்தி போல் தேய்த்து  கொள்ளவும்.


3. அடுத்து ஒரு பாத்திரத்தில் முட்டைஉப்புவெங்காயம்பச்சைமிளகாய்பூண்டு,   இஞ்சி மற்றும் கொத்தமல்லி சேர்த்து நன்கு அடித்து வைத்துக்கொள்ளவும்.


4. தவாவை சூடு செய்து செய்த சப்பாத்தியை போட்டு இருபுறமும் நெய் தடவி சுட்டெடுக்கவும்.


5. அடுத்து தவாவில் செய்து வைத்த முட்டை கலவையில் சிறிதளவு ஊற்றி அதன் மேல்செய்த சப்பாத்தியை வைத்து லேசாக அழுத்தவும்.


6. முட்டை சப்பாத்தி தயார்.


Monday, July 5, 2021

பாதுஷா | Badusha Recipe


 தேவையானபொருட்கள் 


மைதா- 1 கப் 


கெட்டிதயிர்- 2 மேசைக்கரண்டி 


நெய்- 2 மேசைக்கரண்டி 


பேக்கிங்சோடா- 1 சிட்டிகை 


எண்ணெய்


சர்க்கரை- 1 கப் 


தண்ணீர்- 1 கப் 


ஏலக்காய்தூள்- 1 சிட்டிகை 


செய்முறை 


1. முதலில்தயிர்நெய்பேக்கிங்சோடா சேர்த்து நன்கு அடித்துகொள்ளவும்


2. மற்றோரு பாத்திரத்தில்மைதாவை போட்டுஇதில் சிறிது சிறிதாக தயிர்    கலவையை சேர்த்துநன்கு பிசையவும்.


3. 10 நிமிடம் மூடிவைக்கவும்


4. சர்க்கரை பாகு செய்யபாத்திரத்தில் தண்ணீர் மற்றும் சர்க்கரை சேர்த்து   கரைக்கவும்


5. சர்க்கரை லேசாக கெட்டியானதும்அடுப்பை அணைத்து பாத்திரத்தை இறக்கவும்


6. இதில் ஏலக்காய் தூள் சேர்த்து கிளறவும்.


7. ஊறியமாவை சிறியவடை போல் தட்டி உட்புறமாக மடிக்கவும்


8. கடாயை சூடு செய்துபாதுஷாவை உள்ளே போடவும் 


9. அடுப்பை குறைத்து வைத்து வேகவிடவும்


10. பொன்னிறம் வந்ததும்எடுத்து 3  நிமிடம் ஆறவிடவும்


11. அடுத்து சர்க்கரை பாகில் போடவும்.


 12 மணி நேரம் அல்லது இரவு முழுவதும் ஊற வைக்கவும்


12. இறுதியாக நறுக்கிய பாதாம்பிஸ்தா தூவி பரிமாறவும்.


சிக்கன் வறுவல் | Chicken fry Recipe


 தேவையானபொருட்கள்


சிக்கன்  - 1 கிலோ


எலுமிச்சைசாறு பழம் 


தயிர்- 2 தேக்கரண்டி


உப்பு- 1 தேக்கரண்டி


மஞ்சள்தூள்- 1/4 தேக்கரண்டி


சீரகம்தூள்- 1 தேக்கரண்டி


மல்லிதூள்- 1 தேக்கரண்டி


சாட்மசாலா- 1/2 தேக்கரண்டி


கரம்மசாலா- 1 தேக்கரண்டி


மிளகாய்தூள்- 2 தேக்கரண்டி


சோளமாவு- 1 மேசைக்கரண்டி 


கடலைமாவு- 2 மேசைக்கரண்டி 


எண்ணெய்


மசாலாவிழுதுஅரைக்க 


வெங்காயம்- 1 


பூண்டு- 5 பற்கள் 


இஞ்சி


பச்சைமிளகாய்- 1 



செய்முறை 


1. சிக்கன் வறுவல் செய்ய ஒரு மசாலா விழுது அரைக்க மிஸ்சியில் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம்பூண்டு பற்கள்இஞ்சி துண்டுகள்பச்சை மிளகாய் சேர்த்து   விழுதாக அரைக்கவும் 


2. அடுத்து ஒரு கிண்ணத்தில் சிக்கன் துண்டுகளை எடுத்து அதில் எலுமிச்சைசாறு,   சிறிது தயிர்அரைத்த மசாலாவிழுதுதேவையான அளவு உப்புமஞ்சள்தூள்சீரகத்தூள்மல்லித்தூள்சாட் மசாலாதூள்கரம் மசாலாதூள்கஷ்மீரி மிளகாய்தூள்சோளமாவுகடலை மாவு சேர்த்து நன்கு பிசைந்து முப்பது நிமிடத்திற்கு மூடிவைக்கவும் 


3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் சூடேற்றிய பின்பு சிக்கன் துண்டுகளை சேர்த்து பத்து நிமிடத்திற்கு பொரிக்கவும் 


4. பத்து நிமிடம் கழித்து இந்த சிக்கன் துண்டுகளை பாத்திரத்தில் வைத்து ஐந்து நிமிடம் மூடிவைக்கவும் 


5. ஐந்து நிமிடம் கழித்து இந்த சிக்கன் துண்டை எண்ணையில் சேர்த்து முப்பது வினாடிபொரித்து சூடாக பரிமாறவும்