தேவையான பொருட்கள்
டைஜெஸ்டிவ் பிஸ்கட் - 6
நெய் - 2 தேக்கரண்டி
முழு கொழுப்புள்ள பால் - 1/2 லிட்டர்
காபி தூள் - 2 1/2 மேசைக்கரண்டி
வெண்ணிலா எசென்ஸ் - 1/2 தேக்கரண்டி
பட்டை தூள் - 1/2 தேக்கரண்டி
சர்க்கரை - 1/3 கப்
சோள மாவு பால் கலவை
செய்முறை
1. மிக்ஸி ஜாரில் டைஜெஸ்டிவ் பிஸ்கட்டை துண்டுகளாக உடைத்து சேர்த்து நன்கு பொடியாக அரைக்கவும்.
2. பின்பு அதில் நெய் சேர்த்து கலந்து வைக்கவும்.
3. பாத்திரத்தில் முழுகொழுப்புள்ள பால் சேர்த்து கொதிக்கவிடவும், பின்பு காபி தூள் சேர்த்து கலக்கவும்.
4. பிறகு வெண்ணிலா எசென்ஸ், பட்டை தூள், சர்க்கரை சேர்த்து கலக்கவும்.
5. பின்பு சோளமாவில் பால் சேர்த்து கரைத்து காபி கலவையில் சேர்த்து 3 நிமிடம் கொதிக்கவிடவும்.
6. பிறகு கிளாஸ் டம்ளரில் டைஜெஸ்டிவ் பிஸ்கட் பவுடரை தயார் செய்த காபி கலவையில் ஊற்றி ஆறியதும், 1 மணிநேரம் பிரிட்ஜில் வைக்கவும்.
7. காபி புட்டிங் தயார்!