Saturday, August 27, 2022

தண்டாய் | Thandai recipe


 தண்டாய் | Thandai 


        தேவையான பொருட்கள்


பால் - 1 1/2 லிட்டர்

குங்குமப்பூ

பாதாம் - 1/4 கப்

முந்திரி பருப்பு - 1/4 கப்

பிஸ்தா - 1/4 கப்

முலாம்பழம் விதைகள் - 1/4 கப்

கசகசா - 1 1/2 மேசைக்கரண்டி

சோம்பு - 2 மேசைக்கரண்டி

மிளகு - 2 தேக்கரண்டி

ஏலக்காய் - 1 தேக்கரண்டி

சூடான தண்ணீர்

காய்ந்த ரோஜா இதழ்கள்

சக்கரை - 3/4 கப்

ரோஸ் எசென்ஸ் - 1/4 தேக்கரண்டி


            செய்முறை

1. தண்டாய் செய்வதற்கு பாலை கொதிக்க வைத்து அதில் குங்குமப்பூ சேர்த்து கொதிக்கவைத்து இறக்கிவைக்கவும்.


2. பின்பு ஒரு பாத்திரத்தில் பாதாமை சூடான தண்ணீரில் 6 மணிநேரம் ஊறவைக்கவும்.


3. மற்றோரு பாத்திரத்தில் முந்திரி, பிஸ்தா, முலாம்பழ விதைகள், கசகசா, சோம்பு, மிளகு, ஏலக்காயை சேர்த்து சூடான தண்ணீரில் 6 மணிநேரம் ஊறவைக்கவும்.


4. ஊறவைத்த பாதாமை தோல்நீக்கி வைக்கவும்.


5. ஊறவைத்த மற்ற பொருட்களை நீர் இன்றி மிக்ஸியில் போட்டு, தோல்நீக்கிய பாதாம் மற்றும் காய்ந்த ரோஜா இதழ்கள் சேர்த்து தண்ணீர் அல்லது பால் சேர்த்து விழுதாக அரைக்கவும்.


6. ஒரு அகலமான கடாயில் குங்குமப்பூ சேர்த்த பாலை ஊற்றி அதில் அரைத்த விழுதை சேர்த்து நன்கு கலந்துவிடவும்.


7. பின்பு சர்க்கரை சேர்த்து கலந்து, இறுதியாக ரோஸ் எஸ்சென்ஸ்சை சேர்த்து கிளறி ஆறவிடவும்.


8. ஆறியதும் பிரிட்ஜில் வைத்து, குங்குமப்பூ, ரோஜா இதழ்கள் தூவி பரிமாறவும்.

Thursday, August 25, 2022

Coconut milk pudding recipe

 

         Ingredients


• ¼ cup coconut milk , 60g

• 2 pieces of gelatin sheets , 10g

• 95 g heavy cream , ¼ cup + 3 tbsp.

• 135 g milk , ½ cup + 1 tbsp.

• 3 tbsp. sugar , 37g

• desiccated coconut as needed

• fresh fruit as needed


          Instructions


  • Soak the gelatin in cold water, soaking for several minutes until they become soft and transparent. Move out and drain completely.


* Mix milk, coconut milk, heavy cream and sugar in a small pot. Heat over slowest fire until the sugar dissolves (use slowest fire and don’t boil your mixture).

 

* Add gelatin sheets in and stir to make sure they are completely dissolved too.


* Spoon the mixture into any container or mould and set in fridge for at least 4 hours before serving.


* For coconut milk pudding bites: lay plastic wrapper in the bottom of a rectangle container and then pour the mixture in. Refrigerate for 4 hours, transfer out and cut into one-bite size cubes and coat with desiccated coconut before serving.

Tuesday, August 23, 2022

பாம்பே சான்விச் | Bombay Sandwich


 


             தேவையான பொருட்கள்


மசாலா தூள் செய்ய


சீரகம் - 3 தேக்கரண்டி

சோம்பு - 1 தேக்கரண்டி

கிராம்பு

மிளகு - 1 தேக்கரண்டி

பட்டை - 2 துண்டு

ஆம்சூர் பவுடர் - 1 தேக்கரண்டி

கருப்பு உப்பு - 1/2 தேக்கரண்டி


புதினா கொத்தமல்லி சட்னி செய்ய


புதினா இலை - கையளவு

கொத்தமல்லி இலை - 1/2 கப்

பச்சை மிளகாய் - 3

இஞ்சி - 1 துண்டு நறுக்கியது

எலுமிச்சைபழச்சாறு - 1/2 பழத்தின் சாறு

கருப்பு உப்பு - 1/2 தேக்கரண்டி

தண்ணீர் - 1 தேக்கரண்டி


பாம்பே சான்விச் செய்ய


பிரட்

உப்பில்லாத வெண்ணெய்

புதினா கொத்தமல்லி சட்னி

வேகவைத்த உருளைக்கிழங்கு

அரைத்த மசாலா தூள்

நறுக்கிய வெங்காயம்

நறுக்கிய தக்காளி

வெள்ளரிக்காய்

மொஸரெல்லா சீஸ்


            செய்முறை


1. கடாயில் சீரகம், சோம்பு, கிராம்பு, மிளகு, பட்டை சேர்த்து வறுத்து பின்பு நன்கு ஆறவிடவும்.

2. பின்பு மிக்ஸி ஜாரில் வறுத்த மசாலா, ஆம்சூர் பவுடர், கருப்பு உப்பு சேர்த்து நன்கு பொடியாக அரைத்து கொள்ளவும்.

3. பிறகு மற்றோரு மிக்ஸி ஜாரில் புதினா இலை, கொத்தமல்லி இலை, பச்சை மிளகாய், இஞ்சி, எலுமிச்சைபழச்சாறு, கருப்பு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு விழுதாக அரைக்கவும்.

4. பிரட் துண்டில் வெண்ணெய் தடவி அதன் மேல் புதினா கொத்தமல்லி சட்னியை தடவவும்.

5. பின்பு அதன் மேல் வேகவைத்து நறுக்கிய உருளைக்கிழங்கு துண்டுகளை வைக்கவும்.

6. பிறகு அரைத்த மசாலாவை அதன் மேல் தூவி பின்பு நறுக்கிய வெங்காயத்தை உருளைக்கிழங்கின் மேல் வைக்கவும்.

7. பின்பு அரைத்த மசாலாவை அதன் மேல் தூவவும். மற்றோரு பிரட் துண்டில் வெண்ணெய் தடவி அதன் மேல் புதினா கொத்தமல்லி சட்னியை தடவி பின்பு வெங்காயத்தின் மேல் வைக்கவும்.

8. பிறகு பிரட்டின் மறுபக்கம் வெண்ணெய் தடவி பின்பு கொத்தமல்லி புதினா சட்னியை தடவவும்.

9. பின்பு நறுக்கிய தக்காளி துண்டுகளை அதன் மேல் வைத்து அரைத்த மசாலாவை தூவி பிறகு நறுக்கிய வெள்ளரிக்காயை அதன் மேல் வைக்கவும்.

10. பிறகு அரைத்த மசாலாவை தூவி மற்றோரு பிரட் துண்டில் வெண்ணெய் மற்றும் புதினா கொத்தமல்லி சட்னியை தடவவும்.

11. தயார் செய்த சான்விச் மேல் சீஸை துருவி சேர்த்து பின்பு கடைசி பிரட் துண்டை வைத்து மூடவும்.

12. அடுத்து க்ரில் பேனில் வெண்ணெய் தடவி அதன் மேல் தயார் செய்த சான்விச்சை வைக்கவும்.

13. பின்பு எல்ல பக்கமும் வெண்ணெய் தடவவும். இரண்டு பக்கம் பொன்னிறமாக மாறியதும் எடுத்து பரிமாறவும்.

14. பாம்பே சான்விச் தயார்!

காபி புட்டிங் | Coffee Pudding




         தேவையான பொருட்கள்


டைஜெஸ்டிவ் பிஸ்கட் - 6

நெய் - 2 தேக்கரண்டி

முழு கொழுப்புள்ள பால் - 1/2 லிட்டர்

காபி தூள் - 2 1/2 மேசைக்கரண்டி

வெண்ணிலா எசென்ஸ் - 1/2 தேக்கரண்டி

பட்டை தூள் - 1/2 தேக்கரண்டி

சர்க்கரை - 1/3 கப்

சோள மாவு பால் கலவை


           செய்முறை


1. மிக்ஸி ஜாரில் டைஜெஸ்டிவ் பிஸ்கட்டை துண்டுகளாக உடைத்து சேர்த்து நன்கு பொடியாக அரைக்கவும்.

2. பின்பு அதில் நெய் சேர்த்து கலந்து வைக்கவும்.

3. பாத்திரத்தில் முழுகொழுப்புள்ள பால் சேர்த்து கொதிக்கவிடவும், பின்பு காபி தூள் சேர்த்து கலக்கவும்.

4. பிறகு வெண்ணிலா எசென்ஸ், பட்டை தூள், சர்க்கரை சேர்த்து கலக்கவும்.

5. பின்பு சோளமாவில் பால் சேர்த்து கரைத்து காபி கலவையில் சேர்த்து 3 நிமிடம் கொதிக்கவிடவும்.

6. பிறகு கிளாஸ் டம்ளரில் டைஜெஸ்டிவ் பிஸ்கட் பவுடரை தயார் செய்த காபி கலவையில் ஊற்றி ஆறியதும், 1 மணிநேரம் பிரிட்ஜில் வைக்கவும்.

7. காபி புட்டிங் தயார்! 

Tuesday, November 9, 2021

கட்பட் ஐஸ் கிரீம் | Gadbad Ice Cream


 தேவையானபொருட்கள்



வெண்ணிலா ஐஸ்கிரீம்

ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம்

பட்டர்ஸ்காட்ச் ஐஸ்கிரீம்

ஆப்பிள் நறுக்கியது

வாழைப்பழம் நறுக்கியது

பச்சை திராட்சை நறுக்கியது

முந்திரி பருப்பு நறுக்கியது

உலர்ந்த திராட்சை

வேகவைத்த சேமியா

ஸ்ட்ராபெர்ரி ஜெல்லி

செர்ரி


           செய்முறை


1. ஆப்பிள்வாழைப்பழம்திராட்சைஆகியவற்றை  சிறிதாக நறுக்கி  எடுத்து வைக்கவும்.


2. பரிமாறும் கிளாஸ்ஸில்வெண்ணிலா ஐஸ்கிரீமைபோட்டுநறுக்கிய பழங்களை போடவும்.


3. அடுத்து நறுக்கிய முந்திரி பருப்புஉலர்ந்த திராட்சையைபோட்டுஸ்ட்ராபெர்ரி ஐஸ் கிரீமை போடவும்.


4. அடுத்து சிறிதளவு ஸ்ட்ராபெர்ரி ஜெல்லிவேகவைத்த சேமியாவை சேர்க்கவும்.


5. இன்னொருமுறை நறுக்கிய பழங்கள்முந்திரிதிராட்சை சேர்க்கவும்.


6. இறுதியாக பட்டர்ஸ்காட்ச் ஐஸ்கிரீம் வைத்துசெர்ரியை வைக்கவும்.


7. கட்பட் ஐஸ்கிரீம் தயார்

சிக்கன் லாலிபாப் | Chicken Lollipop


 தேவையானபொருட்கள்


      சிக்கன்'னை ஊற வைக்க


சிக்கன் லாலி பாப்- 6

சோயாசாஸ்- 1 1/2 தேக்கரண்டி

ரெட்சில்லி சாஸ்- 2 தேக்கரண்டி

தக்காளி கெட்சப்- 2 தேக்கரண்டி

எலுமிச்சை பழச்சாறு- 1/2 பழம் 

இஞ்சி பூண்டு விழுது- 1 தேக்கரண்டி

உப்பு - 1 தேக்கரண்டி

மிளகு தூள்

முட்டை- 1

சோளமாவு- 1 மேசைக்கரண்டி

மைதா- 1 மேசைக்கரண்டி




       சிக்கன்லாலிபாப்செய்ய




எண்ணெய்- 2 தேக்கரண்டி

பூண்டு நறுக்கியது

இஞ்சி நறுக்கியது

சிவப்பு மிளகாய் நறுக்கியது

சோயாசாஸ்- 1 தேக்கரண்டி

ரெட்சில்லி சாஸ்- 2 மேசைக்கரண்டி

தக்காளி கெட்சப்- 2 மேசைக்கரண்டி

தண்ணீர்

பொரித்த சிக்கன் லாலிபாப்

வெங்காயத்தாள் நறுக்கியது




            செய்முறை



1. பாத்திரத்தில்சோயாசாஸ்சில்லிசாஸ்தக்காளிகெட்சப்எலுமிச்சைபழச்சாறுஇஞ்சி பூண்டு விழுதுஉப்புமிளகுதூள்முட்டை,சோளமாவுமைதா சேர்த்து நன்கு கலக்கவும்.

 

2. சிக்கன் துண்டுகளை சாஸ் கலவையில் போட்டுமணி நேரம் ஊறவைக்கவும்.


3. ஊறிய சிக்கன் துண்டுகளைஎண்ணையில் போட்டு பொன்னிறமாகும் வரை பொரிக்கவும்.


4. கடாயில்எண்ணெய் ஊற்றிஇதில் பூண்டுஇஞ்சிசிவப்பு மிளகாய்சேர்த்து வதக்கவும்.



5. அடுத்து இதில் சோயாசாஸ்சில்லிசாஸ்தக்காளி கெட்சப் ஊற்றி   கிளறவும்.


6. இதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கிண்டவும்.


7. இதில் பொரித்த சிக்கன்'னை போட்டு பிரட்டவும்.


8. கடைசியாக இதில் நறுக்கிய வெங்காயத்தாள்தூவி இறக்கவும்


பிரட் சாட் | Bread Chaat


 தேவையான பொருட்கள்


பிரட் டோஸ்ட் செய்ய


கடலை மாவு- 1/2 கப்

சோளமாவு- 1 மேசைக்கரண்டி

இஞ்சிபூண்டுவிழுது- 1/2 தேக்கரண்டி

சில்லிபேஸ்ட்- 2 தேக்கரண்டி

உப்பு- 1/2 தேக்கரண்டி

சாட்மசாலாதூள்- 1 தேக்கரண்டி

மாங்காய்தூள்- 1 தேக்கரண்டி

ஓமம்- 1/2 தேக்கரண்டி

கசூரிமேத்தி- 2 தேக்கரண்டி

எலுமிச்சைபழச்சாறு- 1 பழம்

பிரவுன்பிரட்

நெய்- 2 தேக்கரண்டி



டாப்பிங் செய்ய



மாதுளை விதைகள்- 1/2 கப்

வெங்காயம்- 1 நறுக்கியது

தக்காளி- 1 விதை நீக்கி நறுக்கியது

பச்சை மிளகாய்- 2 விதை நீக்கி நறுக்கியது

கொத்தமல்லி இலை- 1/2 கப் நறுக்கியது

புதினா இலை- 1/2 கப் நறுக்கியது

சாட் மசாலா தூள்- 1/2 தேக்கரண்டி



பிரட் சாட் செய்ய



டோஸ்ட்டுபிரட்ஸ்லைஸ்

புதினாகொத்தமல்லிசட்னி

இனிப்புபுளிசட்னி

டாப்பிங்

சாட்மசாலாதூள்

சேவ்



செய்முறை



1. பாத்திரத்தில் கடலைமாவுசோளமாவுஇஞ்சி பூண்டு விழுது,

சில்லி பேஸ்ட்,  உப்புசாட் மசாலாதூள்மாங்காய்தூள்ஓமம்கசூரிமேத்திஎலுமிச்சை பழச்சாறு மற்றும் தண்ணீர் சேர்த்து கட்டி இன்றி   கரைக்கவும்.


2. பிரட்'டை வட்ட வடிவில் வெட்டவும்.


3. நறுக்கிய பிரட்துண்டை கரைத்தமாவில் பிரட்டிபேனில் நெய்   ஊற்றி டோஸ்ட் செய்யவும்.


4. டாப்பிங் செய்யபாத்திரத்தில்மாதுளை விதைகள்வெங்காயம்,   தக்காளிபச்சை மிளகாய்கொத்தமல்லி இலை புதினா இலைசாட் மசாலாதூள் சேர்த்து கிளறவும்.


5. பிரட் சாட் செய்யடோஸ்ட்டு பிரட்ஸ்லைஸ் மீதுபுதினா கொத்தமல்லி சட்னிஇனிப்பு புளிசட்னிடாப்பிங்கை வைக்கவும்.


6. கடைசியாக சிறிதளவு சாட்மசாலாதூள் மற்றும் சிறிதளவு சேவ்தூவிபரிமாறவும்

வஞ்சரம் மீன் வறுவல் | Spicy Fish Fry


 தேவையான பொருட்கள்


    மசாலா செய்ய


மஞ்சள் தூள்- 1/4 தேக்கரண்டி

மிளகாய் தூள்- 1 தேக்கரண்டி

உப்பு- 1/2 தேக்கரண்டி

கடலை மாவு- 2 தேக்கரண்டி

பச்சை மிளகாய் விழுது- 1 தேக்கரண்டி

இஞ்சி பூண்டு விழுது  - 1 தேக்கரண்டி

தண்ணீர்



மீன்வறுவல்செய்ய



வஞ்சரம் மீன்- 1 துண்டு

செய்த மசாலா கலவை 

பச்சை மிளகாய்- 3 கீறியது

கறிவேப்பில்லை

எண்ணெய்




      செய்முறை




1. பாத்திரத்தில்மஞ்சள் தூள்மிளகாய் தூள்உப்புகடலை மாவு,   பச்சை மிளகாய் விழுதுஇஞ்சி பூண்டு விழுதுதண்ணீர் சேர்த்து       கலக்கவும்.


2. மீன் மீதுமசாலாவை தடவி, 10 நிமிடம் ஊறவைக்கவும்.


3. கடாயில் எண்ணெய் ஊற்றிமீன்துண்டை போடவும்.


4. இதனுடன் கீறிய பச்சை மிளகாய் போட்டு  நிமிடம் வறுக்கவும்.


5. மீனை திருப்பிபோட்டு மேலும் நிமிடம் வறுக்கவும்.


6. கடைசியாக கறிவேப்பில்லை போட்டு இறக்கவும்